Home-ta | constitutional reforms
சிறந்ததொரு எதிர்காலத்தின் நிமித்தம்

அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு

பங்களிப்பைச் செலுத்துவோம்

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களால் 20 உறுப்பினாகள்; கொண்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவொன்று உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.  குழு உறுப்பினர்கள் சிலர் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவஞ் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வேளையில் ஏனையோர் அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டனர்.  பின்வருவோர் உறுப்பினர்களாவர்:


  • 1. திரு.லால் விஜேநாயக்க (தவிசாளர்)
  • 2. திரு.பாஈஸ் முஸ்தபா சனாதிபதி சட்டத்தரணி
  • 3. பேராசிரியர் காமினி சமரநாயக்க
  • 4. பேராசிரியர் நவரட்ண பண்டார
  • 5. பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர்
  • 6. திரு.என்.செல்வக்குமாரன்
  • 7. கௌரவ எஸ்.தவராசா
  • 8. திரு.குஷhன் த அல்விஸ் சனாதிபதி சட்டத்தரணி
  • 9. கலாநிதி ஹரிணி அமரசூரிய
  • 10. கலாநிதி குமுது குசும் குமார
  • 11. திரு.சுனில் ஜயரட்ண
  • 12. கலாநிதி உபுல் அபேயரத்ன
  • 13. திரு.தேமியா ஹூருளே
  • 14. திரு.வின்ஸ்ரன் பத்திராஜா
  • 15. கலாநிதி எஸ்.விஜேசந்திரன்
  • 16. திரு.எம்.வை.எம்.பாஈஸ்
  • 17. திருமதி எம்.கே.நதீகா தமயந்தி
  • 18. செல்வி.காந்தி ரணசிங்ஹ
  • 19. திரு.எஸ்.சீ.சீ.இளங்கோவன்
  • 20. திரு.சிறீமசிறி ஹப்புஆராச்சி

குழுவின் பணி

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மூல மற்றும் எழுத்து மூலச் சமர்ப்பணங்களைப் பெறுவது குழுவின் பணியாகும்.  அதன் பின்னர், அந்தச் சமர்ப்பணங்கள் மீதான அறிக்கையொன்றைத் தயாரிக்கவும்  அத்துடன் சிபார்சுகளைப் பரிந்துரைக்கவும் குழு கோரப்பட்டுள்ளது.  இவை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை உப குழுவினால் கவனத்தில் கொள்ளப்படும்.


சமர்ப்பணங்களை எவ்வாறு செய்வது?

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க விரும்பும் எந்தப் பிரசை அல்லது குழு இந்த வலைத் தளத்தில் தரப்பட்டுள்ள சகல அல்லது ஏதேனும் விடயங்கள் மீது தமது யோசனைகளை முன்வைக்கலாம்.  பின்வரும் ஏதேனும் விதமாக அவற்றை அனுப்பலாம்:

  • 1. வலைத்தளத்தில் தரப்பட்ட விடயத்தின் மீது அழுத்துவதன் மூலம்
  • 2. வலைத்தளத்தில் தரப்பட்ட விலாசத்துக்கு மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைநகல் அனுப்புவதன் மூலம்
  • 3. பொது மக்களுக்கான அமர்வுகள் இந்தக் குழுவால் நடாத்தப்படும் போது வாய்மொழிச் சமர்ப்பணங்களை (அவற்றின் எழுத்தினாலான பிரதான சாராம்சத்துடன்) நேரடியாகச் செய்வதன் மூலம், (பொது மக்களுக்கான அமர்வுகள் தொடர்பான அட்டவணையைப் பார்க்க)

பொதுமக்களுக்கான அமர்வுகள்

இக்குழு நாட்டின் சகல மாவடங்களிலும் பொது மக்களுக்கான அமர்வுகளை நடாத்தும்.  பொது மக்களுக்கான அமர்வுகள் தொடர்பான விபரங்களுக்கு அட்டவணையைப் பார்க்க.

குழுவின் பொது மக்களுக்கான அமர்வுகளில் பங்குபற்ற விரும்பும் எந்த தனிநபரோ அல்லது நிறுவனமோ குழுவின் செயலகத்துடன் பின்வருவனவூடாகத் தொடர்பு கொண்டு தமது வாய்மொழி மூலமான சமர்ப்பணத்துக்கான தினத்தையும் நேரத்தையும் முன்னராகவே ஏற்படுத்திக் கொள்வது விரும்பத்தக்கதாகும்.

தொலைபேசி: 0112437676
தொலைநகல்: 0112328780
மின்னஞ்சல்: constitutionalreforms@gmail.com
மின்னஞ்சல்: yourconstitution.lk
தபால்: தவிசாளர்
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் 
யோசனைகள் குழு 
செயலகம்,
விசும்பாய, ஸ்ரேபிள்ஸ் வீதி
கொழும்பு 02

முன்கூட்டியே தினத்தையும் நேரத்தையும் ஏற்படுத்திக் கொள்வது வாய்மொழி மூலமாகச் சமர்ப்பணத்தைச் செய்வதற்காகக் குழுவைச் சந்திப்பதிலுள்ள ஏதேனும் தேவையற்ற தாமதங்களைத் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

வாய்மொழி மற்றும் எழுத்து மூலமான சகல சமர்ப்பணங்களும் பதிவு செய்யப்பட்டு குழுவின் உறுப்பினர்களால் பரிசீலிக்கப்படும்.

பொது மக்களும் ஊடகங்களும் பொதுமக்களுக்கான அமர்வுகளைப் பார்வையிடலாம்.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் அறிக்கை

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட சமர்ப்பணங்கள் மீது அவதானஞ் செலுத்தி குழுவானது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றைத் தயாரிக்கும், இந்த அறிக்கையானது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அமைச்சரவை உப குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும்.  

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் அறிக்கை பொது மக்களுக்குப் பெறக்கூடியதாகவிருக்கும்.

 

Awareness

Contact

Mailing Address

Public Representations Committee on Constitutional Reforms
Visumpaya,
Colombo 02.
Sri Lanka.

Contact Numbers

  +94 (112) 437676
  Fax : +94 (112) 328780
  e-mail : constitutionalreforms@gmail.com